விழுப்புரம் பரிக்கல் ஸ்ரீநரசிம்மர் திருத்தலத்தில்… இன்னொரு வழிபாடு முக்கியத் துவம் வாய்ந்தது என்கின்றனர் பக்தர்கள்.
இரண்டு ஆஞ்சநேயர் சுவாமிகள் இக்கோவிலின் உட்பிரகாரத்திலுள்ளனர். வடக்குப் பிரகாரத்தில் ஓரத்தில் பக்த ஆஞ்சநேயரும் மற்றும் வீர ஆஞ்சநேயரையும் சேவிக்கலாம். மூல மூர்த்தியை வணங்கிய பிறகு ஆஞ்சநேயரை வணங்க வேண்டும். அவர் முன்பு நெல் தானியத்தை ஒரு தட்டில் பரப்பி ஆஞ்சநேயர் முன்பு வைக்க வேண்டும். பக்தர்கள் நெல்லை பரப்பி தங்கள் விருப்பத்தை கட்டை விரலால் நெல்லில் எழுதி பகவானிடம் பிரார்த்திக்கின்றனர். இவ்வாறு தங்கள் விருப்பதை நிறைவேற்ற வேண்டுகின்றனர்.
இந்த பரிக்கல் நரசிம்மரை சுவாமியை வணங்க வேண்டும் என்ற விரும்புகிறார்களோ அவர்கள் நவதானியங்களைப் பரப்பி அதில் தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டுகின்றனர். பக்தர்களின் பலமான நம்பிக்கை என்னவென்றால் இக்கோவிலின் முக்கியமான இடத்தில் நரசிம்மரிடம் வேண்டினால், தங்கள் கோரிக்கைகள், தொல்லைகள் நீங்கப் பெற்று, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அமைதியும் நல்ல தேக ஆரோக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம்!
To read about other South Indian temple please click https://goo.gl/8DNzJU