திருமகள், கலைமகள் இருவருக்கும் இடையே, ‘தங்களில் பெரியவர் யார்?’ என்ற தர்க்கம் எழுந்தது. இருவரும் பிரம்மாவிடம் சென்று தங்களது சந்தேகத்தைத் தீர்க்குமாறு வேண்டினர். ‘லட்சுமியே சிறந்தவள்!’ என்றார் பிரம்மா.

இதனால் கோபம் கொண்ட கலைமகள் பிரம்மனின் சிருஷ்டி தண்டத்தை பறித்ததுடன் அவரை விட்டும் பிரிந்து சென்றாள். சிருஷ்டி தண்டம் இல்லாததால், படைப்புத் தொழில் ஸ்தம்பித்தது. இதனால் கலங்கிய பிரம்மன், மகாவிஷ்ணுவை குறித்து தவம் இருந்தார் (படைப்பின் மூலமான பரம்பொருளைக் காணும் பொருட்டு பிரம்மன் தவம் இருந்ததாகவும் கூறுவர்).

பிரம்மாவின் முன் தோன்றிய மகாவிஷ்ணு, ‘’உமது குறை தீர வேண்டுமானால் நூறு அஸ்வ மேத யாகம் செய்ய வேண்டும். இல்லையெனில் ஒன்றுக்கு நூறாக பலன் தரும் திவ்ய  க்ஷேத்திரமான காஞ்சிக்குச் சென்று, ஒருமுறை அஸ்வமேத யாகம் செய்ய வேண்டும்!’’ என்று அருளி மறைந்தார்.அதன்படி பூலோகம் வந்த பிரம்மன், காஞ்சியில் அஸ்வமேத யாகத்தைத் துவங்கினார். பத்தினி இல்லாமல் செய்யும் யாகம் பூர்த்தியடையாது என்பதால், வியாசரிடம், ‘கலைவாணியை அழைத்து வருக!’ என்று கட்டளையிட்டார். ஆனால், கலைவாணி மறுத்து விட்டாள். எனவே, சாவித்திரிதேவியுடன் யாகத்தைத் துவக்கினார் பிரம்மன். இதனால் அதிக கோபம் கொண்ட கலைவாணி, யாகத்தைத் தடுக்குமாறு அக்னி, அசுரர்கள் ஆகியோரை ஏவினாள்.

இதையறிந்த பிரம்மன், திருமாலை சரணடைந்தார். யாகத்தைக் காக்க திருவுளம் கொண்ட பகவான், கலைவாணியால் ஏற்படுத்தப்பட்ட தடைகளைத் தகர்த்தார்.இறுதியில் சரஸ்வதிதேவி, நதியாக பிரவாகித்தாள். அப்படி வேகவதியாய் பாய்ந்து வந்த நதியை வழிமறித்து தம் கை- கால்களைப் பரப்பி குறுக்காகப் படுத்துக் கொண்டார் மகாவிஷ்ணு. நதி, அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டது; வெட்கம் அடைந்த ஸ்ரீசரஸ்வதி, அந்தர்வாகினியாக பூமிக்குள் மறைந்தாள்! யாகம் இனிதே நிறைவுற்றது.

யாகத்தில் ஜோதிப் பிழம்பாகத் தோன்றிய பெருமாள் சிருஷ்டி தண்டத்தை பிரம்மனுக்குத் தந்தருளினார். பிறகு, பிரம்மனின் வேண்டுகோள்படி, அங்கேயே புண்ணியகோடி விமானரூடராக- ஸ்ரீவரதராஜர் எனும் திருநாமத்துடன் கோயில் கொண்டார்.

பெருமாள் சிருஷ்டி தண்டத்தை பிரம்ம தேவனுக்கு அருளியது, கிருத யுகம்- ஐந்தாவது மன்வந்த்ரம்- யுவ வருடம், விருஷப மாதம் (ரிஷபத்தில் சூரியன் இருக்கும் காலம்)- சுக்ல பட்ச சதுர்த்தசி, அஸ்வ நட்சத்திர நன்னாள் என்று போற்றுகிறது ஸ்தலபுராணம்!

Categories: General

Related Posts

General

Phulera Dooj, 28 February 

  Phulera Dooj is a wonderful celebration of the colourful season we are in – spring time. Phulera means ‘’of flowers’’. Falling between Vasant Panchami and Holi, this festival is mostly celebrated in the North Read more…

General

फुलेरा दूज – 28 फ़रवरी – मंगलवार

  वसंत ऋतु के उल्लासपूर्ण वातावरण का एक आनंदमयी उत्सव है ‘फुलेरा दूज’। यह त्यौहार वसंत पंचमी और होली के बीच फाल्गुन मास के शुक्ल पक्ष की द्वितीया तिथि को मनाया जाता है। इसे फाल्गुन Read more…

General

శ్రీ కన్యకాపరమేశ్వరి ఆలయం, బెల్లంపల్లి

  శ్రీ వాసవీ కన్యకా పరమేశ్వరి వైశ్యుల కులదేవత.  వాసవీ పురాణంలో వైశ్యులలో కళింగ వైశ్యులు, త్రివర్ణిక వైశ్యులనే రెండు వర్గాలు ఉన్నట్లు పేర్కొనబడినది. ఈ దేవతకు ప్రధాన క్షేత్రం పశ్చిమ గోదావరి జిల్లా పెనుగొండ. వాసవీ కన్యకా పరమేశ్వరి ఆత్మార్పణ చేసుకొనే సమయంలో భక్తుల కోరిక మేరకు Read more…